அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 9 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூடுதலாக விடுதி வளாகத்தில் உள்ள 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






