--- --:--:-- --

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி..!

9

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவியை மீட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் மாணவியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி தாலியுடன் பள்ளிக்கு வந்திருப்பதாக சமூகநலத்துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர் தாலி கட்டிய அருள் பிரகாஷ் மற்றும் அருள் பெற்றோர் ஆகியோர் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

மேலும் இதுகுறித்து சமூக நலத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon