ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார்..!
ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில் சுமார் 7 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அரசு முறை பயணமாக டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் இந்தியா ரஷ்யா இடையிலான ராணுவ உறவை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் இந்த சந்திப்பின்போது இடம்பெறும் என கூறப்படுகிறது. அப்பொழுது ரஷ்யாவிடமிருந்து ஏகே 203 ரக துப்பாக்கியை வாங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கொள் முதல் செய்யப்பட்ட வான் பாதுகாப்பு விமான ஊர்தியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் அப்பொழுது நடைபெற உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






