ஒமிக்ரான் வைரஸ் பரவலால் புதிய கட்டுப்பாடுகள்..!

ர்நாடகாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கொரொனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் வைரஸ் தடுப்பு முறைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கும் கர்நாடக அரசு மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவளை தடுப்பூசிகள் போட்டு இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

 

பள்ளி ,கல்லூரிகளில் வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளிவந்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப் படுவார்கள் எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.