17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்..!
சென்னையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை அபகரித்துக்கொண்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மன்னார்குடியை சேர்ந்த 15 வயதான சிறுமி கடந்த 9ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமி குடும்ப பிரச்சினையால் வருவதை அறிந்த முத்துராஜ் கோயம்பேடு வரவழைத்துள்ளார்.
பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமி அணிந்திருந்த 5 சவரன் நகைகளை வாங்கி கொண்டுள்ளார். எனவே கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






