--- --:--:-- --

1330 திருக்குறளை தலைகீழாக எழுதி அசத்திய சிறுமி..!

3

கிருஷ்ணகிரி அருகே ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி 1330 திருக்குறளை தலைகீழாக எழுதி அசத்தி வருகிறார். நாச்சிக்குப்பத்தில் ஊராட்சி நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது.

 

இந்தப் பள்ளியில் கூலித் தொழிலாளி கணேஷ் என்பவரது மகள் வர்ஷினி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும் தமிழ்மீது கொண்ட பற்றால் ஏதாவது ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்துள்ளது.

 

1330 திருக்குறளையும் தலைகீழாக எழுத முடிவு செய்துள்ளார். 8 நாட்களில் இரவு பகல் பாராமல் தலைகீழாக வெற்றிகரமாக எழுதி முடித்து அசத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon