வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் கண்டெடுக்கப்பட்ட புதையல்..!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புதையல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தனது நிலத்தில் வீடு கட்டுவதற்காக 66 அடியில் குழி தோண்டியபோது ஒரு சிறிய பழைய சாக்கு பை கிடைத்துள்ளது. அதில் உருண்டை வடிவில் வெள்ளை நிற பாசிகள் போன்று இருந்துள்ளது.
தகவலறிந்த காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். அந்த புதையலில் இருந்தது விலை உயர்ந்த பாசியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆய்விற்கு பின்னரே உண்மை தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






