கர்நாடகாவில் தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர்..!
கர்நாடகாவில் பெய்த தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
மேலும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்த நிலையில் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






