580 ஆண்டுகளுக்கு பின் வரும் 19ம் தேதி வானில் அரிய நிகழ்வு..!
580 ஆண்டுகளுக்குப்பின் மிக நீண்ட சந்திரகிரகணம் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்தியாவின் பெரும்பான்மையான பகுதியில் இந்த அரிய நிகழ்வு தெரியாது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் வைத்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படும். அப்பொழுது நிலவிய சூரியனின் ஒளியை முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
பாதி அளவு மறைத்தால் அது பகுதி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் மிக நீண்ட நேரம் பகுதியளவு சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி மதியம் 12.48 மணிக்கு தொடங்கி 4. 17 மணி வரை நிகழ உள்ளது.
இதற்கு முன் இது போன்ற நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் கடந்த 1480 ம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் அடுத்து இது போன்ற நிகழ்வு 2669ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.






