கும்பாபிஷேகம் நடத்த தயாராகி வரும் கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில்
கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் ஆலயம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. சுமார் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தது. விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருப்பணி குழு சார்பில், 3-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பணிக்குழு தலைவர் எஸ்.பி.ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மா.சேகர் முன்னிலை வகித்தார். பொருளாளர் மு.கண்ணதாசன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மா.வேலுச்சாமி, துணை செயலாளர் கோ.முனிராஜ், துணைப் பொருளாளர் சு.ராமக்கண்ணன், சிற்பி பாண்டி, உறுப்பினர்கள் கோ.நல்லதம்பி, மு.கருணாகரன் மற்றும் கோவில் பங்குதாரர்கள் கோவிந்தன்,மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்ட விபரம் வருமாறு:-
ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் ஆலயம், பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. தற்போது ஒயிட் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது.
கோவில் மண்டபத்தில் “கிரில் கேட், டைல்ஸ்” கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 மாதத்திற்கு பிறகு, வர்ணம் பூசுவதற்கு சாரம் அமைத்து, பெயிண்ட் அடிக்கும் பணி துரிதப்படுத்தி, அதற்கு ஆகும் அடியக்கூலி செலவை பங்குதாரர்களிடமிருந்து வசூலிக்க கோவில் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
அதேபோல, கும்பாபிஷேகம் நடத்த சில மாதங்களே உள்ளன. கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் இன்றிலிருந்து நன்கொடை ரசீது மூலம் அதிக வசூல் செய்ய வேண்டும். இதற்கிடையில் கோவில் மணிகள், பழமையான அருவாள்கள், திரிசூலம் ஆகியவற்றை புதுப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





