காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்து..!
திருப்பதியில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதிவேகமாக சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் மீது மோதி நின்றது. மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக நொறுங்கிய நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த இருவர் மட்டும் காயமடைந்தனர்.
டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்களின் மீது பார்க்கிங் செய்வது போல நின்று உள்ளது. விபத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






