லண்டனில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி..?
இந்தியாவில் பெரும் கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனின் பக்கிங்காம் பகுதியில் உள்ள 300 ஏக்கர் நிலம் ஒன்றை தங்கள் வசிப்பிடமாக மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் குழும தலைவர் தனது குடும்பத்துடன் லண்டன் அல்லது உலகின் வேறெங்கும் இடம்பெயர எந்த திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.






