--- --:--:-- --

மீண்டும் ஜார்ஜியா செல்கிறாரா நடிகர் விஜய்..!

13

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய் மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

 

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு கொரொனா தொற்று அதிகமானதால் அனைத்து காட்சிகளையும் படமாக்காமலேயே படக்குழு இந்தியா திரும்பியது. அதையடுத்து சென்னை, டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

தற்போது இறுதி கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சண்டைக் காட்சி உள்ளிட்ட சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon