நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 9 பேர்..!
கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவற்றில் முழு அளவில் தண்ணீர் காணப்படுகிறது.
மேலும் கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆறு, மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தநிலையில் நீர்நிலைகளைப் வேடிக்கை பார்க்கவோ, விளையாடவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையும் மீறி சென்ற 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.






