3 குழந்தைகளின் தாயை கொலை செய்த நபர்..!
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மூன்று குழந்தைகளின் தாயை கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். நார்த்தம் பட்டியை சேர்ந்த ரவி தேன்மொழி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தேன்மொழிக்கும் அவருடன் பணிபுரிந்த அசோகன் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்டனர். கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க தேன்மொழியிடம் திருமண ஆசை காட்டி அழைத்து சென்று தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.






