தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர் உயிரிழப்பு..!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே தடுப்பூசி எடுத்துக் கொண்ட முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அருகே உள்ள காவல்காரன் பாளையத்தை சேர்ந்த மருதை என்பவருக்கு சுவாசக் கோளாறு இருந்த நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் ரேஷன் பொருட்கள் வழங்க மாட்டோம் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உடல் சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாக அவர் தூங்கியும் எழாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.






