--- --:--:-- --

நீட் தேர்வை பொறுத்தவரை நான் மாணவர் பக்கம் தான் – சாய் பல்லவி

9

நீட் தேர்வை பொறுத்தவரை தான் எப்போதும் மாணவர் பக்கம் இருப்பதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக சமீபத்தில் பேசிய நடிகை சாய் பல்லவி நீட் தேர்வு மாணவர்களுக்கு வேதனையைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். பதினெட்டு வயது கூட நிரம்பாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது ஏற்கமுடியாத ஒன்று என்றும் மன வலியை தருவதாகவும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon