இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுமிக்கு ஆறுதல் கூறிய முதல்வர்..!
சேலத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அந்த சிறுமியிடம் அலைபேசியில் பேசி நம்பிக்கை அளித்துள்ளார்.
விஜயகுமார், நந்தினி தம்பதிக்கு ஜனனி என்ற குழந்தை உள்ளார். 16 வயதுடைய அந்த சிறுமி ஸ்கேட்டிங் வில்வித்தை போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தாயின் உதவியுடன் இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறார்.
போதிய வருமானம் இல்லாததால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதவிடுமாறு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய் ஆகியோர் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இதையடுத்து சிறுமியை மற்றும் அவரது தாயுடன் தொலைபேசி மூலம் முதல்வர் பேசியுள்ளார். தைரியமாக இருக்குமாறும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசி இருப்பதாகவும் சிறுமியிடம் முதல்வர் கூறியுள்ளார்.






