--- --:--:-- --

செருப்புக்குள் செல்போன் மற்றும் ப்ளூடூத் வைத்து தேர்வு ..!

6

ராஜஸ்தானில் ரீட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் செருப்புக்குள் செல்போன் மற்றும் ப்ளூடூத் வைத்து தேர்வு எழுதியவர்கள் சிக்கினார். தேர்வின் போது செருப்பில் முழு செல்போனை மறைத்து விட்டு சிறிய ப்ளூடூத் வைத்து தேர்வு எழுதியவர் பிடிபட்டார்.

 

அவரைத் தொடர்ந்து சிலர் இதே பாணியில் தேர்வு எழுதிய மேலும் 4 பேர் பிடிபட்டனர். இதுபோன்ற செருப்புகளை தயார் செய்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து ரீட் தேர்வு நடந்த மாவட்டங்களில் செல்போன் இணைப்பு மற்றும் இணையவழி சேவை கிட்டத்தட்ட 12 மணிநேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon