வகுப்பறையில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஐந்து ஆசிரியைகள் பணியிடை நீக்கம்..!
உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஐந்து ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆக்ராவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட கல்வி அதிகாரிகள் 5 ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டனர். ஆசிரியர் பணியின் போது நடனம் ஆடியது விதியை மீறிய செயல் என்று கூறி 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.






