--- --:--:-- --

நீட் தேர்வு பயத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்..!

4

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தில் கடிதம் எழுதிவிட்டு மாணவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான மாதவி என்பவரின் மகன் விக்னேஷ் .கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்தார்.

 

இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். திடீரென புதன்கிழமை இரவு விக்னேஷ் காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

மாணவர் எழுதி வைத்த கடிதத்தில் நீட் தேர்வில் இந்த ஆண்டும் ஏமாற்றம் என்று உண்மையை கூற பயமாக இருப்பதாகவும் தனது பெற்றோரை அம்மா அப்பா என்று அழைஅழைக்கும் தகுதி தனக்கு இல்லை எனவும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 

வெற்றியை தேடி வெகு தூரம் செல்வதாகவும், வெற்றி பெற்றவனாக ஒரு நாள் திரும்பி வருவேன் இது சத்தியம் எனவும் எழுதியிருந்தார். இதுதொடர்பாக அந்த மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

விசாரணை நடத்திய போலீசார் செல்போன் சிக்னலை வைத்து அவர் சென்னை செல்லும் ரயிலில் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து 3நேரத்திலே மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon