--- --:--:-- --

18 இஸ்லாமிய குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு..!

8

யிலாடுதுறை அருகே 18 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இஸ்லாமிய ஜமாத் சார்பில் 18 இஸ்லாமிய குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது எனவும், யாரேனும் மரணமடைந்தால் ஊர் மையவாடியில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பதாகவும் 18 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளனர்.

 

வக்பு வாரிய சட்டதிட்டங்களுக்கு முரணாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தற்போது ஊர் கிராம தலைவர் அமானுல்லா என்பவர் இதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon