நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி அதிகளவில் மது குடித்ததால் உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம் உதகை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நேரத்தில் கைதி தப்பியோடியுள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மருத்துவமனையில் அந்த கைதி உயிரிழந்தார்.
உதகை அருகே உள்ள எடப்பள்ளி பகுதியை சேர்ந்த பென்னி என்பவர் தனது மனைவியை கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இந்த வழக்கு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில் காலை நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
மதியம் 2 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு நீதிமன்றம் கூடியதும் பென்னி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் அவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





