விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்..!
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் சிலை வைத்து வழிபாடுகள் நடத்தி அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில் சிலைகள் வைப்பது தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சந்திப்பில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பொது இடங்களில் சிலைகள் வைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் சிலைகள் வைக்கும் குழுவினர் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






