--- --:--:-- --

வகுப்பறையில் மயங்கி விழுந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

2

கோவை மாவட்டத்தின் சேரி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பொள்ளாச்சி அடுத்த பட்டணம்கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகள் சுந்தரி. இவர் சேரி பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல இன்று காலை 8.50 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார்.

 

பின்னர் சுமார் 10 மணி அளவில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

 

அதன்பின் தெரிய அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon