--- --:--:-- --

பாம்பு பிடிப்பவரை படமெடுத்து நின்ற ராஜநாகம்..!

4

கர்நாடகாவில் வீடு ஒன்றின் கழிவறைக்குள் புகுந்த ராஜநாகம் ஒன்றின் வாலை பிடித்து இழுக்க முயன்ற பொழுது அந்தப் பாம்பு திடீரென படமெடுத்து பாம்பு பிடி வீரரை அதிரவைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

கோபாலகிருஷ்ண பட்டி என்பவரது வீட்டின் கழிவறைக்குள் பாம்பு புகுந்ததாக வந்த தகவலை அடுத்து பாம்பு பிடி வல்லவரான அசோக் சென்றார்.

 

அப்பொழுது கழிப்பறைக்குள் நுழைய முயற்சித்த பாம்பின் வாலை பிடித்து இழுத்த போது அவர் சற்றும் எதிர் பாராத நேரத்தில் திடீரென்று ராஜ நாகம் படமெடுத்து நின்று அவரைக் கடிக்க முற்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் தன் கையில் வைத்திருந்த தடியை வீசியதுடன் சற்று பின்வாங்கி பாம்பு கடியிலிருந்து தற்காத்துக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon