பெற்ற மகனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தாய் கைது..!
கடலூரில் பெற்ற மகனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி பகுதியில் உடலில் காயங்களுடன் 12 வயது சிறுவன் ஒருவன் உலா வந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்பொழுது தனது தாய் கரண்டியை நெருப்பில் சுட வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்திரவதை செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரது தாய் சாந்தி தேவியை பிடித்துள்ளனர்.
சிறுவனின் தந்தை இறந்த நிலையில் வேறு ஒருவருடன் உறவில் இருந்த அவரது தாய் சாந்தி தேவி சிறுவனை துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாந்திதேவி மற்றும் அவருடன் உறவில் இருந்தவரையும் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





