பிளஸ் 2 வினாத்தாளை மாற்ற திட்டமில்லை..!
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் முறையை மாற்றும் திட்டம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். மாணவர்கள் வருகை உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





