கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கதறிய குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..!
திண்டுக்கல்லில் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மீண்டும் திறக்க தெரியாமல் 5 மணி நேரமாக போராடிய ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். திண்டுக்கலில் கேஎஸ்ஆர் அப்பார்ட்மென்ட்டில் மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு ஒன்றரை வயது குழந்தை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு உள்ளது. வெகுநேரமாக தட்டி திறக்க முடியாததால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்பு குழந்தையை மீட்டனர்.






