போலி வலம்புரி சங்கை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த 7 பேர் கைது..!
திருவண்ணாமலை மாவட்டம் திருவலம் பாதையில் போலி வலம்புரி சங்கை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற பாஜக நிர்வாகிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தகவலின் அடிப்படையில் அங்கு உள்ள ஆசிரமத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
போலி வலம்புரி சங்கை பரணி என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. ஒருவர் தப்பி ஓடிய நிலையில் பாஜக நிர்வாகி உமாசங்கர், சாமியார் கோவிந்தராஜ், ஹோட்டல் அதிபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி வலம்புரி சங்கில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி தண்ணீரில் மிதப்பது போன்றும் பாலில் பவுடர் கலந்து சங்கிலிருந்து கொட்டும்போது தயிராக மாறுகிறது எனவும் கூறி அந்த கும்பல் மோசடியில் ஈடுபட வைத்தது தெரியவந்தது.






