பைனான்சியர்கள் 3 பேர் மீது நடிகர் விமல் அளித்துள்ள புகார்.!
மன்னர் வகையரா திரைப்படத்தின் லாபக் கணக்கை மறைத்து தன்னிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக அந்த படத்தின் பைனான்சியர்கள் 3 பேர் மீது நடிகர் விமல் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மன்னர்வகையரா திரைப்படத்திற்கு சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் ஆகிய 3 பேர் பயணம் செய்துள்ளனர்.
படம் நஷ்டம் அடைந்து விட்டதாக கூறி தங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து தொந்தரவு அளித்து வருகின்றனர். ஆனால் சாட்லைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் ஆகியவற்றின் மூலம் 8 கோடி ரூபாய் வரை படம் விற்பனையானதை மறைத்து தன்னிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக நடிகர் விமல் புகார் அளித்தார்.
தனக்கு இரண்டு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் விமல் அளித்த புகாரில் பைனான்சியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






