திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது காதலி புகார்..!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
செம்பனார்கோவில் அருகே 25 வயதான பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சதீஷ்குமார் அந்த பெண்ணை தன் வேலை பார்க்கும் இடமான சென்னைக்கு அழைத்து சென்றார்.
அப்போது இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சதீஷ்குமாரிடம் அந்த பெண் கேட்ட பொழுது அவர் தொடர்ந்து மறுத்துள்ளார்.
இதையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





