--- --:--:-- --

கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி நாளை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

12

கருணாநிதியின் 92-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை கொரொனா இரண்டாம் கட்ட நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

தலைமை செயலகத்தில் இருந்து மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இரண்டாவது கட்டமாக கொரொனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

 

அறநிலையத்துறையில் மாத சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாளர்களுக்கு நான்காயிரம் வழங்குகிறார்.

 

கொரொனாவால் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 10 லட்சம், மருத்துவத்துறை காவலர், நீதித்துறை ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் ரூபாய் கடன் திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

 

அதுமட்டுமின்றி திருநங்கைகளுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதி, திருநங்கையருக்கு 2000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon