சிறையிலுள்ள ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு புகார்..!
பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
புகார்களை கொடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிறையிலுள்ள ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மாணவி கொடுத்த புகாரில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






