--- --:--:-- --

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு இன்று வெளியாக வாய்ப்பு..!

3

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு, மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்ட நிலையில் கொரொனா பாதிப்பு சற்று குறைந்திருந்தாலும் அரசு எதிர்பார்த்த அளவு குறையவில்லை என கூறப்படுகிறது. அதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

தலைநகர் சென்னையில் கொரொனா பாதிப்பு கணிசமாக குறைந்தாலும் கிராமப்புறங்களில் அதிகரிக்கும் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon