--- --:--:-- --

கருப்பு பூஞ்சைகளை தொடர்ந்து வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு..!

4

நாடு முழுவதும் கொரொனா தொற்று பரவலுடன் சேர்ந்து கருப்பு பூஞ்சைகளும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அவற்றை விட ஆபத்தான வெள்ளை பூஞ்சைகளின் தாக்குதல் பீகாரில் கண்டறியப்பட்டுள்ளது. நியூகோர்மைஸிஸ் என்ற கறுப்பு பூஞ்சைகள் தாக்குவது அண்மையில் தெரியவந்தது.

 

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சைகளின் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சைகளை விட மிகவும் ஆபத்தான வெள்ளை பூஞ்சைகள் பீகார் தலைநகர் பாட்னாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் நான்கு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இதே போன்ற வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்புகள் இன்னும் பலருக்கு இருக்கக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளை பூஞ்சைகள் நுரையீரலை மட்டுமின்றி மூளை, சிறுநீரகம், வயிறு, தோல் உறுப்புகளையும் தாக்கும் என கூறுகிறார்.

 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களைப் வெள்ளை பூஞ்சைகள் தாக்கும் என அவர் கூறினார்.

 

கொரொனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை செலுத்தும் போது அலட்சியம் காட்டினால் கூட வெள்ளை பூஞ்சை ஆபத்து நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே மூலம் அவற்றை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon