--- --:--:-- --

மருத்துவ காப்பீடு அட்டைக்காக கொரொனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம்..!

2

சிவகங்கையில் மருத்துவ காப்பீடு அட்டைகாக பாதிப்புக்குள்ளான வரை காப்பீடு திட்ட அலுவலர்கள் அலைக்கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள லாடநேந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜ பிரபு என்பவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில் கொரொனாவுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ராஜ பிரபுவிடம் காப்பீடு இல்லை என தெரிய வந்ததைத் தொடர்ந்து உறவினர் ஒருவர் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீடு அலுவலகத்தை நாடியுள்ளார்.

 

ஆனால் பாதிப்புக்குள்ளான அவரை நேரில் அழைத்து வர வேண்டும் காப்பீடு திட்ட அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனை கண்ட அங்கிருந்த மற்றும் அலுவலர்கள் அச்சத்துடனும் ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஆட்சியர் பாதிப்புக்குள்ளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார். மேலும் அங்கிருந்த காப்பீடு திட்ட அதிகாரிகளிடம் இதுபோல் அழைத்து வர வலியுறுத்தக் கூடாது என எச்சரித்தார்.

 

புதிய மருத்துவ காப்பீடு அட்டைக்காக 50 கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon