மனைவி இறுதி சடங்கில் கணவரும் உயிரிழந்த சம்பவம்..!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் 96 வயது கணவன் இறந்தது அந்த கிராமத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாவுர்சத்திரம் இடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதிகளான 96 வயது மாதவ ராமானுஜம், 86 வயது ஆறுமுகத்தம்மாள் வசித்து வந்துள்ளனர்.
ஆறுமுகத்தம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். மனைவிக்கு இறுதி சடங்கு நடக்கும் நேரத்தில் 96 வயது கணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோகுலம் பால்பண்ணை என்ற அமைப்பின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்ததால் பலரும் சோகத்தில் மூழ்கினர்.
96 வயது தீராக்காதல் உடன் வாழ்ந்து தம்பதி அடுத்தடுத்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த மாதவ ராமானுஜம் திடீரென உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





