தீ விபத்து ஏற்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர்தப்பிய பூனை..!
அமெரிக்காவில் பூனை ஒன்று தீ விபத்து ஏற்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழன் அன்று சிகாகோவில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கட்டடத்தில் இருந்த மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். அப்போது இந்த கட்டடத்தில் சிக்கிய கருப்பு நிறப் பூனை ஒன்று ஜன்னலிலிருந்து புல் வெளியில் குதித்து உயிர் பிழைத்தது.






