இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.!
நாடு முழுவதும் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 11 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.






