--- --:--:-- --

நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

8

கொரொனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

முன்ஜாமின் கேட்டு மன்சூரலிகான் தாக்கல் செய்த மனுவில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் கூறியதாகவும் தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

 

நீதிபதி செல்வகுமார் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முன்ஜாமீன் மனுவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என கூறி புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon