--- --:--:-- --

திமுகவும் காங்கிரஸ் அணியும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது..!

1

ட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பாரதிய ஜனதா அணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுகவும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டை தொழில்துறை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ந்த மாநிலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். கோவையில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழக மக்கள் 180 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாகவும் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon