பத்திரிகையாளர்கள் மீது சானிடைசர் அடித்த தாய்லாந்து பிரதமரின் சர்ச்சை வீடியோ..!
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தாய்லாந்து பிரதமர் டென்ஷனான சம்பவம் தற்போது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அரசியல் பிரபலங்கள் நடத்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பல கேள்விகள் தொடுப்பது வழக்கம்.
நம்ம ஊர் அரசியல் ஜாம்பவான்கள் முதல் வெளிநாட்டு அதிபர்கள் வரை இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இதில் அரசியல்வாதிகள் பேசும் வசனங்கள் பல சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளன. அந்தவகையில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளால் டென்ஷனான தாய்லாந்து பிரதமர் திடீரென அவர்கள் மீது சானிடைசர் அடித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பழம் பளாங் பிரச்சார கட்சியை சேர்ந்தவர். தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் இவர் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் பலரும் கேள்விகள் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதாக கூறி பளாங் கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் சென்ற வாரம் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள அமைச்சரவையை நிரப்புவதற்கான வேட்பாளர்களின் பட்டியல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதனைக் கேட்டதும் கோபம் அடைந்த பிரதமர் பிரசாந்த் திடீரென அருகில் இருந்த சானிடைசர் ஒன்றை கையில் எடுத்தார் .பின்பு பத்திரிகையாளர்களை நோக்கி சென்று அவர் முகத்தை மூடியபடி பத்திரிகையாளர்கள் மீது சானிடைசரை அடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பத்திரிக்கையாளர்கள் ஷாக் ஆகியுள்ளனர். தங்களின் செல்போன் கேமராவில் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் அதனை பகிர்ந்துள்ளனர்.






