--- --:--:-- --

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர்..!

1

மிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர். நிவர் மற்றும் புரெவி புயலைத் தொடர்ந்து ஜனவரி மாதமும் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

 

இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான குழுவினர் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். இதையடுத்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பணீந்திர ரெட்டி ஜனவரி மாதத்தில் பெய்த மழையால் 7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை மத்திய குழுவிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் ஒரு குழுவினரும், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ,கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மற்றொரு குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஆய்வுக்குப் பின்னர் மாநில அரசு அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர் ஆறாம் தேதி டெல்லி திரும்பும் மத்திய குழுவினர் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon