--- --:--:-- --

ஓடும் லாரியின் டயருக்குள் தலையை வைத்து ஒருவர் தற்கொலை..!

3

சென்னை கோயம்பேட்டில் ஓடும் லாரியின் டயருக்குள் தலையை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

கோயம்பேடு நூறடி சாலையில் நின்று கொண்டு வாகனங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென லாரியின் முன்னால் விழுந்துள்ளார். லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்கொலை செய்த நபர் யார் எதற்காக லாரியின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon