--- --:--:-- --

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா இன்று தாக்கல்..!

3

மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டம் கடந்த நவம்பர் மாதத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. அதாவது தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதால் இளைஞர்களின் நேரமும் பணமும் விரயமாகிறது என்று கூறி அதற்கு தடை செய்யக்கோரி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

 

சட்டமன்றம் கூடாத நிலையில் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தார். தற்போது தமிழக சட்டமன்றம் கூடி இருப்பதால் அந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon