--- --:--:-- --

முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தொடங்கும்..!

8

ருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசியல் எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் மாணவர்களின் கைரேகை, விழித்திரை ஆகியவற்றையும் பதிவு செய்து அவர்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் தடுப்பூசி செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான ஒப்புதல் கடிதம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிந்த பிறகு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon