--- --:--:-- --

ஓட்டுநர் இல்லா வாகனங்களை ஓட்டுவதற்கு ஏதுவாக ஸ்மார்ட் சாலை..!

11

சீனாவின் ஜியாங்குசு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்மார்ட் சாலையை ஹூவாவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாவாய் போக்குவரத்து துறையில் கால்பதித்தற்கான முதற்படியாக நகரின் நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஸ்மார்ட் சாலையை அமைந்துள்ளது.

 

இந்த சாலையில் ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் பேருந்து சென்று வருகிறது. வேகத்தடைகள், சாலை சந்திப்புகள் நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்த பேருந்து சரியாக நின்று மீண்டும் புறப்பட்டு செல்கிறது.

 

சாலையோரத்தில், சாலையின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உணர்வுகள், கேமராக்கள், ரேடார்கள் ஆகியவற்றிலிருந்து பேருந்தை வழி நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon