--- --:--:-- --

ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி..!

4

வனியாபுரம், ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். பகல் 12 மணிக்கு மேல் மதுரை வரும் ராகுல் காந்தி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்வையிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

 

மேலும் வரும் 23ஆம் தேதி அவர் தேர்தல் பரப்புரையை தொடங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று மாலை 4 மணியளவில் சென்னை வருகிறார்.

 

மதுரையில் நடைபெறும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் தேசிய கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon