--- --:--:-- --

11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த லவ்லி கணேஷ்..!

2

சென்னையில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த லவ்லி கணேஷ் என்ற 22 வயது இளைஞர் 11 பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

 

20 வயது கொளத்தூர் இளம்பெண்ணை திருமணம் செய்த லவ்வலி கணேஷ் முதலிரவிலேயே அதிர்ச்சி கொடுத்து தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். அடி, உதை, சித்திரவதை நான் அனுபவித்த இந்த இளம் பெண் வீட்டு உரிமையாளர் உதவியுடன் தப்பி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

 

இளம் பெண்ணின் உடலில் காயங்கள் உள்ளதாக விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துகொண்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட வைத்ததாக கணேசை போலீசார் கைது செய்துள்ளனர். கணேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon